உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘நிபந்தனைகள் ஏற்றுள்கொள்ளப்பட்டால் புதிய கூட்டணி மலரும்’ மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) உடன் கூட்டணி அமைக்க சில நிபந்தனைகளை முன்வைக்கும் என சு.கவின் ஒரு தொகுதி கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் (யு.பி.எஃப்.ஏ) பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்।

இரு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஐந்தாண்டு பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்துவதும், ஊழல் மற்றும் மோசடி வழக்குகளை விசாரிக்க ஒரு புதிய நீதிமன்றத்தை நிறுவுவதும்  சுதந்திரக் கட்சி வகுக்கும் நிபந்தனைகளில் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை முன்வைக்கப்படும் குறித்த நிபந்தனைகளுக்கு பெறமுண அணி ஏற்றுக்கொண்டால் கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரத்திற்குள் கையெழுத்திடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

வரவிருக்கும் தேர்தல்களில் கூட்டாக போட்டியிடும் பொருட்டு ‘இலங்கை நிதஹஸ் பொதுஜன பெரமுன’ என்ற பெயரில் ஒரு கூட்டணியை உருவாக்க சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதேவேளை  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷவை அதன் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க எஸ்.எல்.பி.பி எடுத்த முடிவுக்கு அவரது பின்னம் உடன்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் அமரவீர மேலும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க