இவ்வருட இறுதிக்குள் 27 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார பாதுகாப்பு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் நேற்றைய தினம் மருந்து வகைகளை இறக்குமதி செய்வோர் சங்கத்தின் 18 ஆவது மாநாடு அம்பாந்தோட்டையில் நடைபெற்றது.
இதற்கமைய, 5 ஆயிரம் மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். ஒரே வர்த்தக குறியீட்டில் பெரும் எண்ணிக்கையிலாக மருந்து வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது வகையில் மருந்த வகைகளை ஒழுங்குறுத்தும் அதிகாரசபையில் முன்னர் போன்று ஒரே மருந்தை பெரும் எண்ணிக்கையிலான வர்த்தக குறியீட்டின் கீழ் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இது வரையறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நடைமுறையின் மூலம் தரமான உயர் மருந்து வகைகளை பொது மக்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம்.
இவ் வருடத்தில் எதிர்வரும் காலங்களில் மேலும் 27 மருந்து வகைகளின் விலையை குறைத்து அதன் நன்மைகளை பொது மக்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளோம்.
கருத்து தெரிவிக்க