இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேசம் அதிருப்தி தெரிவித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு சர்வதேசத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பில் சர்வதேச ரீதியில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவ தளபதியை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது. இராணுவத் தளபதியை மாத்திரமின்றி சகல அரச நியமனங்களிலும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது.
சவேந்திர சில்வாவுக்கு எதிராக யுத்த குற்றங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அவருக்கு எதிராக யுத்த குற்றங்கள் இருப்பின் அவை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படுவதோடு, அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கலாம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க