அவுஸ்திரேலிய அணி ஏசஸ் தொடரில் பௌன்சர் யுத்தத்தில் கவனம் செலுத்தாது என அணியின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றுவதற்கான எங்களின் திட்டம் என்னவென்பது எங்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள லாங்கர், யார் வேகமாக பௌன்சர் வீசுகின்றர் என உணர்ச்சிகரமான மோதல்களில் நாங்கள் சிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இங்கு டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்காகவே வந்துள்ளோம் எத்தனை தரம் தலைக்கவசங்களை தாக்கலாம் என்பதற்காக வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக வெற்றிபெறும் என நாங்கள் கருதும் அணியையே நாங்கள் தெரிவுசெய்வோம்,என தெரிவித்துள்ள ஜஸ்டின் லாங்கர் எனினும் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் பௌன்சர் பந்துகளை பயன்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க