உள்நாட்டு செய்திகள்புதியவை

‘நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு அளப்பரியது’

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு அளப்பரியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவர்களும் உயர்ஸ்தானிகரும் இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த தூதுவர்கள் மூவரும் சிறந்த சாதனைப்பெண்கள் என்றும் பெண்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு இது சிறப்பான சமிக்ஞை என்றும்  அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையின் மக்கள் தொகை 52% பெண்களைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கிறார்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக ஆடைத் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தோட்டத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், அந்நிய செலாவணியைப் பெறுவதில் அதிகம் பங்காற்றுவதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க