யாழ்ப்பாண இலங்கை போக்குவரத்து சபை வீதிகளின் தொழில் சங்கங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம் பெற்றது.
இந்த சந்திப்பு பருத்தித்துறை வீதியின் இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் வே.ரமேஸ் தலைமையில் மதியம் 12:00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது.
வட மாகாணத்திற்கு உட்பட்ட சாலைகளில் சாரதிகள், நடத்துனர்கள் ஓய்வு பெறும் அறைகளோ அல்லது பாதுகாப்பான மலசல கூடங்களோ இல்லை என அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகள் இதன் போது தெரிவித்துள்ளனர்.
பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற பல பணியாளர்கள் நிரந்தர நியமனம் வழங்கப்படாது புறக்கணிக்கப் படுவதாகவும் தமது சாலைகள் திட்டமிட்டு புறக்கணிக்க படுவதாகவும் குறிப்பிடுகின்றது.
தமது வேலைக்கு ஏற்ற மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ஐ.ரங்கேஸ்வரன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சாந்தாதேவி நகரசபை உறுப்பினர் எம் பிரேம்குமார் மற்றும் கோண்டாவில் பருத்தித்துறை சாலைகளின் அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர்சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊளியர் சங்க பொது செயலர் சுஜித் பண்டார உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க