உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

அலரிமாளிகையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு! சஜித்தும் களத்தில்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (19) மாலை 4 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர், புதிய அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

அதேவேளை, இச்சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

 

கருத்து தெரிவிக்க