தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் போருக்குப் பின்னரான நல்லிணக்க செயல் முறைகளை சக்தி மயப்படுத்தல்’ எனும் தொணிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் இரண்டு நாள் செயலமர்வு இடம்பெற்றது.
கிராம ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் சிறப்பாக செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கான வன்முறையற்ற தொடர்பாடல் தொடர்பான விழிப்புணர்வாகவே குறித்த செயலமர்வு அமைந்திருந்தது.
குறித்த செயலமர்வு சனி மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) ஆகிய இரு தினங்கள் மன்னார் கிராமிய அபிவிருத்தி நிறுவன கேட்போர் கூடத்தில் தொடர் பாடலுக்கான பயிற்சி மையத்தின் மன்னார் செயற்திட்ட அலுவலர் எஸ்.ஜோண்சன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த செயலமர்வில்; இன மத ரீதியான முரண்பாடுகளை வன் முறையற்ற தொடர்பாடல் மூலம் சீர் செய்வது தொடர்பாக செயலமர்வு அமைந்திருந்தது.
மேலும், மொழி சார் உணர்வு சார் விடயங்களினால் இனங்கள் மதங்கள் மத்தியில் பரஸ்பர புறிந்துணர்வும் ஏனையவர்கள் மட்டில் அவர்களின் உணர்வு தேவைகளை கண்டறிந்து செயல்படுதல் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
வன்முறையற்ற தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் விரிவுரையாளரும் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட முகாமையாளருமான பெனிக்னஸ் மூலமாக குறித்த செயலமர்வு விரிவாக தெளிவு படுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் இளையோர் யுவதிகள் உட்பட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வுகளின் மூலம் பயிற்சி பெற்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து மாவட்ட ரீதியில் செயற்படக் கூடிய சிவில் அமைப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
கருத்து தெரிவிக்க