உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மஹிந்தவின் நட்புக்காக மைத்ரி எடுத்த முயற்சிக்கு தடைக்கல்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடனை செலுத்திமுடிக்க திறைசேரி மறுப்பு தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 4.4 பில்லியன் ரூபாய்களுக்கான கொடுப்பனவுகளை 2020ஆம் ஆண்டு பாதீட்டில் செலவுகளாக உள்ளடக்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து அந்த யோசனை திறைசேரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும் இந்த செலவுகள் அரச நிதிச்செலவுகளாக கருதப்படமுடியாதவை என்று திறைசேரி தெரிவித்து விட்டது.

இதனையடுத்து இந்த விடயத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்ப நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு முந்தியக் காலப்பகுதியில் ஜனாதிபதி செயலக தேவைகளுக்கு என்றுக்கூறி இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் இலங்கை சுங்கத்துக்கு மாத்திரம் 2 பில்லியன் ரூபாய்கள் செலுத்தப்படவேண்டியுள்ளன.
ஏனைய கொடுப்பனவுகள் தனியார்துறை நிறுவனங்களுக்கு செலுத்தப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க