கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசெல பெரஹெர, பாரம்பரிய முறைப்படி இவ்வருடமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை அறிவிக்கும் பத்திரம் தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேலவினால் சம்பிரதாயபூர்வமாக நேற்று(15) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாகாண ஆளுநர் ராஜித கீர்த்தி தென்னகோன், ஜயந்தி சிறிசேன அம்மையார், ஆளுநர்களான சரத் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஊர்வலத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பாரம்பரிய முறைப்படி பரிசில்களும் விருதுகளும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டதுடன், நாற்பெரும் தேவாலயங்கள் மற்றும் கிராமிய தேவாலயங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியும் இதன்போது வழங்கப்பட்டன.
கருத்து தெரிவிக்க