பொன்மொழிகள்

அறிவுரை, ஆலோசனை

  • தன்னை குருவாக கருதிக் கொண்டு ஒவ்வொருவரும் மக்களுக்கு அறிவுரை வழங்குவது நல்லதல்ல.- இராமகிருஷ்ணர்
  • கடல் பொங்கினால் அற்ப ஜந்து தலையெடுக்க முடியாது. அதுபோல ஞான வெள்ளம் பொங்கினால் அற்பமான அகந்தை தோன்றாது.-ரமணர்
  • புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்து விடுகிறது.- வியாசர் 
  • பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து நல்லநீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால் அறிவு தெளிவடையும்.- தாயுமானவர்

 

கருத்து தெரிவிக்க