ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவுள்ள சூழலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி அதில் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் பெறு பேறுகளுக்கமைய கூட்டணியை அமைக்க பேரம் பேசுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியது.
நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் பெப்ரல் அமைப்பு தயாரித்துள்ள சட்ட மூலத்துக்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதியளித்துள்ளது.
தற்போது அந்தச் சட்டமூலம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் உள்ளது.
சட்டமூலத்தை நிறைவேற்ற 225 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இச்சட்டமூலம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கின்றோம்.
உலகில் பல்வேறு நாடுகளில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் உரிய சட்டங்கள் உள்ளன. அவ்வாறானச் சட்டத்தைத்தான் நாம் கொண்டுவந்துள்ளோம்.
இச்சட்டமூலம் நிறைவேற்றப்படுவதால் பல்வேறு தவறுகளை தடுக்க முடியும். கடந்த நான்கு தசாப்தகாலமாக இதனால் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம்.
நாட்டின் அபிவிருத்திக்காக செலவுசெய்யக் கூடிய நிதியே இவ்வாறு விரயமாகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க