சினிமா

சயீரா நரசிம்ம ரெட்டி படம் உருவாக்கப்பட்ட விதம்!

சயீரா நரசிம்ம ரெட்டி படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது பற்றிய வீடியோ நேற்றையதினம் வெளியாகியிருந்தது.

மெகாபட்ஜெட்டில் பல நாட்களாக எடுக்கப்பட்டு வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை சிரஞ்சீவியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ராமச்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றிய கதையில் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியுடன் பொலிவுட் அமிதாப் பச்சன், கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு ஆகியோருடன் முக்கிய கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இதனால், இப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கின்றார் என்பதால் படத்தில் நடனம் மற்றும் சண்டை காட்சிகள் என அனைத்துமே பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படத்திற்கு பொலிவுட்டின் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் உருவாகிய வீடியோ இதோ

கருத்து தெரிவிக்க