அழகு / ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள் !

இன்றைய கால கட்டத்தில் பலர்  காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இல்லையேல் கைக்கு கிடைத்த உணவை சாப்பிடுகின்றனர். இது உடலை பாதிக்கும். காலை உணவு தான் அன்றைய முழு நாளுக்கு உரிய ஆற்றலை உருவாக்கும். நாம் ஆரோக்கியம் என்று உண்ணும் சில வகை உணவுகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறான உணவு வகைகள் பற்றி பார்ப்போம்.

காலையில் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துதல் கூடாது. அதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும். தேநீரில் உள்ள காபின் இரைப்பை அழற்சியை ஏற்படுத்தும்.

தோடம்பழம், எலுமிச்சை, திராட்சை பழம் போன்ற பழங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியை தந்தாலும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செமிபாடு அடைவதை தாமதப்படுத்தும்.

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மக்னீசியத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தில் பாதிப்பு ஏற்படும்.

இனிப்பு சுவை உள்ள உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடும் போது இன்சுலின் அதிகரித்து நீரிழிவு நோய்  வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சமைக்காத மரக்கறி வகைகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அவை செமிபாடு அடைய நிறைய சக்தி தேவை. அத்துடன் வயிற்று வலகயை ஏற்படுத்தும்.

தயிரையும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அதில் உள்ள லாக்டிக் அமில பக்ரீரியாவை வெறும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அழித்து விடும்.

கருத்து தெரிவிக்க