உள்நாட்டு செய்திகள்புதியவை

டுவிட்டரில் ட்ரென்ட் ஆனார் வேட்பாளர் கோட்டாபய!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பெயர் டுவிட்டரில் ட்ரென்ட் ஆகியுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் டுவிட்டரில் இலங்கை ட்ரென்ட்டிங்கில் வேட்பாளர் கோத்தாபய முதலிடம் பிடித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க