உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவை அடைவதே இலக்கு’ : விக்கி

தன்னாட்சி, தற்சார்பு, தண்ணிறைவை அடைவதே எமது கட்சியின் இலக்கு என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி,விக்கினேஸ்வரன் தெரிவித்தார்

வவுனியாவில் இன்றயதினம் காலை தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மக்கள் தமது குறைகளை தெரிவிப்பதை இலகுப்படுத்தும் நோக்கில் கட்சி காரியாலங்கள் திறக்கபட்டுள்ளன. எங்களிற்கு நிதி பற்றாகுறை இருந்தாலும் புலம்பெயர்தேசங்களில் இருப்பவர்களின் மூலம் மக்களின் குறைகளை தீர்பதற்கு முயற்சிசெய்து வருகின்றோம்.

எமது கட்சி மூன்று விதமான அடிப்படைகொள்கைகளை கொண்டுள்ளது. முதலாவது தன்னாட்சி, வடகிழக்குஇணைந்த நிலையில் தமிழ்மக்கள் தம்மை தாமே நிர்வகிக்ககூடிய அதிகாரங்களை பெறவேண்டும். அரசு வடகிழக்கை மேலும் பிரிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டுவருகின்றன அதனால் முல்லைதீவு மற்றும் வவுனியாவில் வசிக்கும் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

எனவே அரசியல் ரீதியாக தன்னாட்சியை பெறுவதற்கு நாம் பயணிக்கவேண்டும். அடுத்து தன்னாட்சி என்று அரசியல்ரீதியாக செயற்படும் போது எமது வாழ்கைமுறை எவ்வாறுஅமைய வேண்டும் என்பதற்காக தற்சார்பு என்ற அடுத்தகொள்கையை நாம் வகுத்துள்ளோம். எமது அறிவுரைகளுடன், அவற்றை செய்ய எமது கட்சி காத்திருக்கின்றது.

மூன்றாவதாக தன்னிறைவு. வடக்கு கிழக்கு மக்கள் பொருளாதார ரீதியாக தங்களை வளர் த்துக்கொண்ட தன்னிறைவு பெறக்கூடிய ஒரு பிராந்தியமாக வரவேண்டும் என்பது எமது அவா. அதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதனை நாம் அறிந்து ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு கட்சியாக வளரவேண்டும் என்பதே எமது அவா அதற்கு ஏற்றவிதத்தில் எமது செயற்பாடுகள் அமையும் என்றார் .

கருத்து தெரிவிக்க