உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் பிலிப்பைன்ஸில் பயிற்சி

இலங்கையில் இருந்து இரண்டு பயங்கரவாத சந்தேகநபர்கள் பிலிப்பைன்ஸில் பயிற்சிப்பெற்றதாக கூறப்படும் தகவல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பிலிப்பைன்ஸின் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளன.

தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிலிப்பைன்ஸ் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையவராக கூறப்படும் மார்க் கெவின் சம்ஹ_ன் என்பவரும் விக்டோரியா சோபியா என்பவருடன் பிலிப்பைன்ஸில் பயிற்சி பெற்றதாக சிங்கப்பூரின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதி;ல் விக்டோரியா சோபியாவை பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை.

எனினும் 200 பேரை பலிகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சம்ஹ_னின் தாயார் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸின் சுயாபுல் கலீபா பிலுசான் அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் இந்த அமைப்பு பிலிப்பைன்ஸில் உள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தை கொண்டிருந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க