அழகு / ஆரோக்கியம்

பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !

உணவுப் பொருட்களில் பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பாலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் பால் அருந்துவது மிகவும் அவசியம். சிலர் பால் அருந்தினால் குண்டாகி விடுவோம். முகப் பரு வந்து விடும் என்று அதனை தவிர்த்து விடுகின்றனர். அது தவறான கருத்து. உண்மையில் பால் அருந்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

மாதவிடாய் நின்று விட்ட பெண்கள் கட்டாயம்  அரை லீற்றர் பால் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டும்.

பாலில் கல்சியம் நிறைந்துள்ளதால் உடலின் எலும்புகளை பாதுகாத்து பலமளிக்கிறது.

இதயநோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றுக்கும் இரத்த அழுத்தம் சீராகுவதற்கும், உடல் நிறை குறைவதற்கும் பால் அருந்துவது நல்லது.

தினமும் இரவில் பாலுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் நல்ல உறக்கம் வரும்.

பாலில் விற்றமின் B12 இருக்கிறது. இது நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பாலில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமப்படுத்தும். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பாலை அருந்தி வந்தால் நாளடைவில் கற்கள் கரைந்து விடும்.

கருத்து தெரிவிக்க