எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவால் பெயரிடப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானம் எடுக்கவுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கம்போடியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், மஹிந்தவையும், கோட்டாபய ராஜபக்சவையும் சந்தித்து பேச்சு நடத்திய பின்னர், சு.கவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
” பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் பங்கேற்காவிட்டாலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இரு தரப்புகளும் இணைந்து கூட்டணி அமைத்த பின்னர் மற்றுமொரு மாநாட்டைக்கூட நடத்தலாம்.
அவ்வாறு இல்லாவிட்டால் செப்டம்பரில் நடைபெறும் சுதந்திரக்கட்சி மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யலாம்.” என்று மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதேவேளை, மஹிந்த அணியை ஆதரிக்கும் அறிவிப்பு வெளியானதும் சுதந்திரக்கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் தாவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க