இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதியின் செயலாளருக்கும் போல் ஸ்டீவனுக்குமிடையே சந்திப்பு

நேற்று (நவம்பர் 27) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவனுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆதரவளிக்க தயாரெனவும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க