தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 31ஆவது மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா யோகபுரம் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றுள்ளது
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதனுடைய ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உடைய அபிவிருத்திப் பிரிவு உதவி பணிப்பாளர் பிரபாத் லியனகே மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் செகான் கோசல மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உடைய அதிகாரிகள் விளையாட்டு வீர வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதி நிகழ்வுகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதன்போது வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வெற்றி கேடயங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன இதன்போது பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பாண்ட் வாத்திய அணிவகுப்பில் வெற்றியீட்டிய குழுக்களுக்கும் பண பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன
இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் 139 புள்ளிகளை பெற்று துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவு மூன்றாம் இடத்தையும் 147 புள்ளிகள் பெற்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவு இரண்டாம் இடத்தையும் 273 புள்ளிகளை பெற்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன இவர்களுக்கான சான்றிதழ்களை விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.
கருத்து தெரிவிக்க