உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கொழும்பில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணி நிறைவு

கொழும்பு நகரில் தேங்கியுள்ள குப்பைகள் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டுவரும் நிலையில், இன்றுடன் (சனிக்கிழமை) அந்த பணிகள் நிறைவடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை – கெரவலப்பிட்டிய கழிவு சேகரிப்பு மையத்தின் கொள்ளவு எல்லை கடந்ததை அடுத்து, அங்கு மேலும் கழிவுகளை சேகரிக்க இயலாது என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதனால் கொழும்பு நகரில் கழ்வுகள் சேகரிக்கப்படாமல் கடந்த சில நாட்களாக தேங்கியிருந்தமையால், கொழும்பு உள்ளிட்ட புறநகர் பிரதேசங்களில் வாழும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்நிலையில், புத்தளம் அருவக்காட்டில் கழிவுகளை அனுப்புவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு தடையின்றி இடமளிக்குமாறு, வனாத்தவில்லு பிரதேச சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கிணங்க, கொழும்பு நகர சபையின் 150 மெற்றிக் தொன் அளவான குப்பைக்கூளங்கள் புத்தளம் அருவக்காடு குப்பைக்கூள முகாமைப்பிரிவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க