அழகு / ஆரோக்கியம்

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

காளான்கள் மரக்கறி வகைகளுக்குள் உள்ளடக்கப்படுகிறது. காளான்களை பச்சையாக சாப்பிடக்கூடாது. காட்டு காளான்கள் விசத்தன்மை உடையது. எனவே கவனமாக இருக்க வேண்டும்.

காளான்கள் பல முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன. இவற்றில் கலோரி குறைவாக காணப்படுகின்றது.  நார்ச்சத்து மற்றும் புரதத்தின் மூலப்பொருளாகவும் உள்ளன. விற்றமின் B, செலினியம், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன.

காளான்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு, புற்றுநோய், இதயநோய்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.

காளான்களில் உள்ள நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை சமப்படுத்தும்.

இவற்றில் உள்ள பைபர், பொட்டாசியம், விற்றமின் சி ஆகியவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். பொட்டாசியமும்  சோடியமும்  இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

காளான்களில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், புற்று நோய்க் கட்டிகள் ஏற்படாமலும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

செலினியம் பெரும்பாலான பழங்கள், மரக்கறி வகைகளில் காணப்படுவதில்லை. ஆனால் காளான்களில் அதிகமாக உள்ளது. இது கல்லீரல் நொதிய செயற்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.  புற்றுநோயை ஏற்படுத்தும் சில சேர்மங்களை அகற்ற உதவுகிறது. செலினியம் வீக்கத்தை தடுக்கிறது.

கருத்து தெரிவிக்க