உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘மலையகத் தமிழர்களும் தலை நிமிர்ந்து வாழவேண்டும்’

“ காணி, வீட்டுரிமை சகிதம் அனைத்து மலையகத் தமிழர்களும் தலை நிமிர்ந்து வாழவேண்டும். இதற்கான சமூகமாற்றத்தை நோக்கியே எமது எழுச்சிப் பயணம் தொடர்கின்றது.”இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதேச அலுவலகங்கள் திறப்பு விழா இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கண்டி மாவட்டத்தில் அரசியல் ரீதியில் கைவிடப்பட்டிருந்த – அநாதைகளாக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு ஜனநாயக மக்கள் முன்னணியே அரசியல் தலைமைத்துவத்தை பெற்றுக்கொடுத்தது. இதன்காரணமாகவே இன்று ஏனைய சமூகத்துக்கு நிகரான வகையில் அபிவிருத்திகளையும், உரிமைகளையும் அனுபவிக்ககூடியதாக இருக்கின்றது.

லயன் அறைகளை முற்றாக அழிந்து – இருண்ட யுகத்திலிருந்து எமது மக்களை மீட்டெடுத்து காணி, வீட்டுரிமை உட்பட அனைத்து உரிமைகளுடனும் அவர்களை வாழவைக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது.

அந்த இலக்ககை அடைவதற்கான – சமூக மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கான எழுச்சி பயணத்தையே நாம் ஆரம்பித்துள்ளோம்.

எத்தடைகள் வந்தாலும், எமது மக்களுக்காக தளராத துணிவோடு களமாடுவோம். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் மக்கள் பக்கம் நின்றே தீர்மானங்களை எடுப்போம் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.’’ என மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க