உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நல்லுாா் விழா: பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லுாா் ஆலயத்தை சூழ இராணுவம், காவல்துறை இணைந்து அதியுச்ச பாதுகாப்பை வழங்கிவருகின்றனா்.

ஆலயத்திற்கு செல்லும் சகல பிரதான வீதிகளும் மூடப்பட்டிருப்பதுடன், காவல்துறையினர் , இராணுவம் இணைந்து மூடப்பட்ட வீதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கின்றனா். அதேபோல் ஆலய வளாகத்திலும் சீருடைய மற்றம் ஆயுதங்களுடன் பெருமளவு காவல்துறையினர் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­கள் உடற் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­ வர் என்­ப­து­டன், அந்­தப் பிர­தே­சம் முழு­மை­யான சோத­னைக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதற்­கான முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் நேற்­றுப் காவல்துறையினரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. சோத­னைக் கூடங்­க­ளும் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

ஆல­யச் சூழல் பாது­காப்பு நட­வ­டிக்­கைக்­கா­கப் காவல்துறையினர் இன்று காலை 10 மணி முதல்கட­மை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

கருத்து தெரிவிக்க