கொழும்பு டி.ஆர்.வியஜவர்த்தன மாவத்தையில் உள்ள தபால் திணைக்கள கட்டடத்தில் நடைபெற்ற முத்திரை கண்காட்சி 2019 இன்றுடன் நிறைவடைகின்றது.
பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த கண்காட்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். தபால் திணைக்களத்தின் முத்திரை பணியகம் இதனை ஒழுங்கு செய்துள்ளது.
இது வரையில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான முத்திரைகள் இணையத்தளம் மூலமாக கடந்த வருடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இலங்கை தபால் முத்திரைகள் அப்ஸ் கடந்த வரும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியா, இலங்கை, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த முத்திரைகளை கொள்ளவனவு செய்துள்ளனர்.
இதே வேளை எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ள சர்தவதேச தபால் தினத்தன்று இவ்வாறான கண்காட்சியை நடாத்துவதற்கு திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
கருத்து தெரிவிக்க