அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கும். அதுமட்டும் அல்லாமல், உடனடி ஆற்றலை தந்து நம் பிரச்சினைகளை வேறு கோணத்தில் இருந்து பார்த்து முடிவெடுக்கும் ஆற்றலை தரும்.
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு பார்க்காமல் நம்மிடம் உள்ள திறமைகளை நினைத்து மகிழ்வாக இருக்க வேண்டும்.
கடந்த காலத்தை பற்றியோ, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றியோ கவலைப்படாமல் நிகழ்காலத்தில் வாழ வேண்டும். ஏனெனில் இன்றைய இந்த நிமிடம் எப்போதும் கிடைக்காது.
தனிமையை தவிருங்கள். தனிமை நம்மை சோர்வுக்கு உள்ளாக்கி சலிப்பினைத் தரும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றாக சேர்ந்து சந்தோசமாக இருங்கள்.
தினமும் சிறிது தூரம் நடவுங்கள். இயற்கை காற்றில் நடப்பது மனதிற்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் தரும்.
எப்போதும் புன்னகையுடன் இருக்க பழகுங்கள். பெரிதாக சிரிப்பதும் மனதில் ஒரு நிறைவைத் தரும். ‘ வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது பழமொழி. எனவே உங்கள் கையில் இருக்கும் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தொலைத்து விடாதீர்கள்.
கருத்து தெரிவிக்க