உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பயங்கரவாத எதிர்ப்புக்கு உதவ தயார்- ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் தாய்லாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரதிநிதி மொஹ்ஹேர்னி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே இந்த உதவு திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் இலங்கையில் பயங்கரவாத சவால்களை முறியடிப்பதுடன் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் முடியும் என்று ஒன்றியம் உறுதியளித்துள்ளது.

தாய்லாந்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின்போது ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டுக்கு புறம்பான சந்திப்பு ஒன்றின்போதே இலங்கையும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர்.

கருத்து தெரிவிக்க