தமிழகம் தூத்துக்குடி கரைக்கு படகு ஒன்றின் மூலம் வந்த மாலைத்தீவின் முன்னாள் உப ஜனாதிபதி மாலைத்தீவுக்கு திருப்பியனுப்பப்பட்டார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக இந்திய தரப்புக்கள் இன்று தெரிவித்துள்ளன.
அடீப் அப்துல் கபூர் எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி படகு மூலம் தூத்துக்குடிக்கு கரைக்கு வந்தபோது இந்திய கரையோர படையினரால் கைதுசெய்யப்பட்டார்.
இதன்போது தமக்கு மாலைத்தீவில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோருவதற்காக வந்ததாக அவர் தெரிவித்தார்.
எனினும் மாலைத்தீவுடன் இருக்கும் சிறந்த உறவின் அடிப்படையில் அவர் மீண்டும் வந்த படகிலேயே திருப்பியனுப்பப்பட்டார் என்று இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அடீப் அப்துல் கபூர் ஊழல் குற்றச்சாட்டின்பேரில் மாலைத்தீவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க