இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் மருத்துவ நோக்கங்களுக்காக கொழும்பிற்கு வரும் படையினரது நலன்புரி நிமித்தம் தங்குமிட விடுதிகள் கொழும்பு – 5 இல் அமைந்துள்ள மெனிங்டவுன் பிரதேசத்தில் நேற்று (31) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
ஐந்து தொடர்மாடிகளை கொண்டிருக்கும் இந்த நலன்புரி விடுதிகள் அதிகாரபூர்வமற்ற பதவி தரங்கல் பதவியிலுள்ள இராணுவ படையினர்களுக்காக இராணுவ விடுதி மற்றும் தங்குமிட பராமரிப்பு பணியகத்தின் பூரன ஏற்பாட்டில் நிர்வாகித்து வருகின்றன.
இந்த விடுதிகளுக்கான கட்டணங்கள் 300 ரூபாவாக அறவிடப்படுகின்றன.
இந்த தங்குமிட நலன்புரி விடுதிகள் இராணுவ விடுதி மற்றும் தங்குமிட பராமரிப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து திறந்து வைத்தார்.
இச்சந்தர்ப்பத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் இந்திரஜித் வித்தியானந்த, இராணுவ விடுதி மற்றும் தங்குமிட பராமரிப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக, இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
இந்த கட்டிட நிர்மான பணிகளிற்கு 1.4 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து பிரதேசங்களிலிருந்து கொழும்பிற்கு தேவைகளின் நிமித்தம் வருகை தரும் படையினர்களுக்காக இந்த விடுமுறை விடுதிகள் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன.
இராணுவ தளபதி இந்த விடுதி திறந்து வைப்பின் பின்னர் ஒவ்வொரு விடுதிதொகுதிகளுக்கு சென்று அங்கு தங்கியிருந்த படையினர் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுடன் சுகசெய்திகளை கேட்டு அவர்களுடன் உரையாடலையும் மேற்கொண்டார்.
மேலும் இராணுவ தளபதி அவர்கள் இந்த நலன்புரி விடுதியின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விடயங்களையும் இராணுவ அதிகாரிகளுடன் இச்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடினார்.
கருத்து தெரிவிக்க