உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கண்டி மாவட்டத்தில் கால்பதிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி!

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளை கண்டி மாவட்டத்தில் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் முன்னணியின் பிரதித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இதன்படி கண்டி மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் பிரதேச வாரியாக கட்சி அலுவலகங்களை திறப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி நாவலப்பிட்டிய, புஸல்லாவை, பன்விலை, தெல்தோட்டை ஆகிய பகுதிகளில் உப அலுவலகங்கள் திறந்துவைக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வேலுகுமார் எம்.பி.,

“ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்டத்துக்கான பிரதான அலுவலகம் கண்டி நகரில் அமைந்துள்ள போதிலும், மக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம், எமது தலைவர் அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலுடன் பிரதேச அலுவலகங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

மக்களை தேடிச்சென்று அவர்களுக்கு சேவை வழங்குவதே இதன் பிரதான நோக்கங்களுள் ஒன்றாகும். எனவே, கண்டி மாவட்டத்திலுள்ள மக்கள் இனி ஏதேனும் பிரச்சினையெனில் பிரதான அலுவலகத்துக்கு வரவேண்டிய தேவை ஏற்படாது.

பிரதேச அலுவலகத்துக்கு சென்று மனுக்களை கையளிக்கலாம். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதேசங்களில் கடந்தகாலங்களில் தற்காலிக அலுவலகங்களே இயங்கின. இனி முறையான பொறிமுறையின்கீழ் அவை இயங்கும். ‘’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க