உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கெட்டபுலா பகுதியில் தாழிறக்கம்: மக்கள் வெளியேற்றம்

நாவலபிட்டி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக ஐந்து குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றபட்டுள்ளதாக நாவலபிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் நிலம் தாழிறங்குவதை அவதானித்த பிரதேச மக்கள் நாவலபிட்டி காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

இதை அடுத்தது கிராம உத்தியோகத்தரின் ஊடாக கொத்மலை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மேற்படி குடும்பங்கள் வெளியேற்றபட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் சுரங்கி பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை வெளியேற்றபட்ட மக்கள் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொத்மலை ஒயா அமைக்கப்பட்ட காலப்பகுதியில் வெளியேற்றபட்டு குறித்த பகுதியில் குடியேற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க