மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் கனிய மணல் அகழ்வை தடைசெய்யுமாறு கோரி கையளிக்கப்பட்ட மகஜரை கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதன் போது குறித்த மகஜரை பெற தனக்கு அதிகாரமில்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜலால் த சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னால் அரசினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் தனக்கு தலையிடுவதில் அதிகாரமின்மையே இதற்கு காரணமென அவர் கூறியதாக வாகரை பிரதேச வாசிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் 2012 ஆண்டு கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம், வாகரைப்பிரதேசத்தில் மணல் அகழ்வுக்கு சவுதி நாட்டு நிறுவனமான அல் ஜிமி ஹெவி மெட்டல் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்வதால் அதை தடுக்கும் நோக்கத்தில் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க