தனக்கு எதிரான வழக்கை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு செப்டம்பர் 27 அன்று அறிவிக்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஜூலை 31) தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் திவிநெகும திணைக்களத்துக்கு சொந்தமான ரூ .29 மில்லியன் மதிப்புள்ள நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் நீதிபதி குலதுங்க ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் உறுப்பினராக இருப்பதால் அவர் நியாயமான விசாரணையை நடத்த முடியாது என்று கூறி பசில் ராஜபக்ஷ இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையை இடைநிறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.
குறித்த இடைக்கால உத்தரவு இன்று முதல் செப்டம்பர் 08 வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க