உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேசிய பாரம்பரிய தளமாக மாறுகிறது மிஹிந்தலை சிகரம்

போசொன் தினத்தை ஒரு தேசிய விழாவாக கொண்டாடும் நோக்கில் அனுராதபுரத்தில் உள்ள மிஹிந்தலை சிகரம் தேசிய பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட உள்ளது.

நேற்று (ஜூலை 30) அமைச்சரவைக் கூட்டத்தில் புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா முன்வைத்த முன்மொழிவுக்கு அமைய இந்த விடயத்துக்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் போசொன் வாரம் மற்றும் மிஹிந்தலை பெரஹெராவை தேசிய நிகழ்வுகளாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதேவேளை போசொன் விழாவைக் கொண்டாடும் போது எழும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர் பெரேரா சுட்டிக்காட்டியிருந்தார்.

போசொன் தின கொண்டாட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத அனுசரிப்புகளில் ஈடுபடுவதற்காக மிஹிந்தலைக்கு வருகை தருகின்றனர்.

கருத்து தெரிவிக்க