ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சில அரச நிறுவனங்கள் ஏற்படுத்தும் நட்டம் சாதாரண மக்களுக்கு பெரும் சுமை என்றும் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் அடியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நேற்று கொழும்பு பி.எம்.ஐ.சி.எச்சில் இடம்பெற்ற இலங்கை வங்கியின் 80 வது ஆண்டு விழாவில் இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இந்த விழாவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் நிதி அமைச்சர் எரன் விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ரயில்வே, இலங்கை மின்சார சபை , இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன ஏற்படுத்தும் நட்டம் ஏழை மக்களின் மீது சுமத்தப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனங்கள் தேசிய பொருளாதாரத்தில் பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அச்சுறுத்துவதன் மூலம் தொழிற்சங்கங்கள்அவற்றின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிரதமர் விக்ரமசிங்க தனது உரையில் இலங்கை வங்கி எவ்வாறு உருவானது என்பதைக் நினைவுப்படுத்தியதோடு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க