எல்லைப் பாதுகாப்பை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் “தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்” மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு வெளிநாட்டு பயணிகளுக்கு உறுதியளித்துள்ளார்.
ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியதில் அவர்கள் திருப்தி அடைந்துள்ளதாகவும், இதேவேளை நாட்டின் அனைத்து முக்கிய மதங்களும் தங்கள் விழாக்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு மாதங்களில் கண்டியில் பிரபலமான எசல பெரஹர மற்றும் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் பெரஹராக்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இந்துக்களின் வேல் திருவிழாவும் மற்றும் பிற கத்தோலிக்க திருவிழாக்கள் தேவட்ட, தலவில மற்றும் மட்டும் மடு தேவாலயங்களில் இடம்பெறுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை சுற்றுலா மீண்டும் மறுமலர்ச்சியைத் பெறுவ தாகவும்,சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலத்திற்கு” பெறாத சலுகைகள் மற்றும் கட்டணங்களைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.
கருத்து தெரிவிக்க