உள்நாட்டு செய்திகள்புதியவை

அமைச்சர் ரஞ்சன் மீதான வழக்கு நாளை இடம்பெறவுள்ளது

அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சிகளின் வாக்குமூல விசாரணை நாளை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 29) அறிவித்தது.

இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட நீதிபதி குழுவில் உள்ள, உறுப்பினர்கள் சிலர் ஏனைய வழக்குகளின் விசாரணையில் கலந்து கொண்டிருப்பதாகக் தெரிவித்து குறித்த அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 21 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது நீதித்துறைக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக அமைச்சர் ராஜன் ராமநாயக்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சாட்சிகளாக பெயரிட்டுள்ள 14 நபர்களின் பட்டியலை சட்டமா அதிபர் சமர்ப்பித்திருந்தார்.

அமைச்சர் ராமநாயக்க கூறிய கருத்துக்கள் நீதித்துறையை இழிவுபடுத்துவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

வணக்கத்துக்குரிய மகல்கண்டே சுதந்த தேரர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர் ஆர்.சுனில் பெரேரா ஆகியோர் அமைச்சருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க