உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

மாகாண ரீதியில் சாதனை: மாணவர்களுக்கு கெளரவிப்பு

2019 ஆண்டுக்காக மாகாண விளையாட்டு விழாவில் வடமாகாண ரீதியில் சாதனை புரிந்த மன் கற்கடந்தகுளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று(29) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திரு. பிரான்ஸிஸ் தலைமையில் காலை 10 மணியளவில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் பிந்தங்கிய கிராமங்களில் ஒன்றான குறித்த கிராமம் ஒவ்வொரு வருடமும் விளையாட்டுதுறையில் சாதனை படைத்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வாரங்களில் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் இடம் பெற்ற விளையாட்டு நிகழ்வில் 16 வயது மற்றும் 14 வயது தனிப்பிரிவிலும் 12 வயது குழு பிரிவிலும் மாகாணரீதியாக சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் ஒட்டு மொத்தமாக மாகாணரீதியில் 92 புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் பிறட்லி ,அருட்தந்தை சுரேந்திரன் ரேவல், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கோட்டக்கல்வி பணிப்பாளர் உதவி உடற்கல்வி பணிப்பாளர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர்கள் மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க