உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘கழிவு கொள்கலன்களை திருப்பி அனுப்ப உத்தரவு’

கொழும்பு துறைமுகம் மற்றும் ஹெய்லீஸ்  மண்டலம் (HFZ) ஆகியவற்றில் உள்ள கழிவுகளை மீண்டும் அதன் சொந்த இடத்திற்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

கழிவுகள் அடங்கிய கொள்கலன்களின் விபரம் அடங்கிய அறிக்கையை சுற்றுச்சூழல் ஆணையம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த நிலையில் இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

111 கழிவுக் கொள்கலன்களை ஏற்றுமதி செய்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு தகவல் வழங்க சுங்கத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அவற்றை அகற்ற ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலன்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் காணப்படுகின்றன.

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை அனுப்புவதற்கு குறித்த வெளிநாட்டு நிறுவனம் எமது அனுமதி பெறாததால் சுற்றுச்சூழல் அதிகாரசபை இந்த விடயத்தில் தலையிட முடியாத நிலை உள்ளதாக பணிப்பாளர் ஜெயசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க