எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி அரசாங்கம் 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கவுள்ளது. இவர்களில் 5000 பேர் ஆசிரியர்களாக இணைத்தது கொள்ளப்படவுள்ளனர் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப தர பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் வேலைத்திட்ட நிகழ்விலேயே உரையாற்றுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
கடந்த சில வருடங்களில் கல்வி துறையில் முற்போக்கு நடவடிக்கைகள் பல மேற்கொள்ள முடிந்துள்ளது.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தை போன்று சுலக்ஷா காப்புறுதி வேலைத்திட்டம் தரம் 13 வரையிலான கல்வி வேலைத்திட்டம் போன்ற மனித வள அபிவிருத்திக்கான நடவடிக்கைள் பல முன்னெக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க