உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம்; அமைச்சரவையில் அனுமதி!

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு, புதிய சட்ட மூலதிற்கான ஆரம்ப கட்ட வரைபுகளுக்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது.

இந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த இந்த சட்டமூலத்தை அங்கீகரிப்பதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது.

இந்த சட்ட மூலத்தின் மூலம் புதிய பயங்கரவாத குலுக்கல் உருவாகுவது அதேபோல அதற்கு ஆட்கள் சேர்ப்பது வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்கள் செயலாற்றுவது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்படும் என பிரதம மந்திரி தெரிவித்திருக்கின்றார்.

புதிய சட்டத்தின்படி பயங்கரவாத குழுக்கள் முழுமையாக இலங்கையில் உருவாகுவதை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத குழு இலங்கையில் செயற்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அதனை இன்னும் முழுமையாக முறியடிக்கவில்லை என்ற கருத்தையும் இதன்போது தெரிவித்திருக்கின்றார்.

எனவே புதிய சட்ட மூலங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.

கருத்து தெரிவிக்க