அழகு / ஆரோக்கியம்

பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

மனித உடல் 80%  நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அதேபோல் பழங்களிலும் 80% நீர்ச்சத்து உள்ளது. இவற்றில் கெட்ட கொழுப்பு எதுவும் இல்லை. பழங்கள் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். அவ்வாறான பயன்கள் சிலவற்றை பார்ப்போம்.

பழங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. இவை எந்த ஒரு விடயத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

பழங்களில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, விற்றமின்கள் அதிகமாக உள்ளது. அவை நமது உடலில் உள்ள திசுக்களை அழிந்து விடாமல் பாதுகாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை தரும். நாம் தினமும் பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய், இருதயநோய், மறதி, போன்றவற்றையும், மன அழுத்தத்தையும் குணமாக்கும்.

மேலும் பழங்களோடு பழரசங்களையும் அருந்தி வந்தால் அதில் உள்ள சக்தி இலகுவாக இரத்தத்தில் கலப்பதால் விரைவில் பயன்களை அடையலாம்.

பழங்கள் மலச்சிக்கலை குணமாக்கும் உணவுகள் விரைவில் செமிபாடு அடைய வைக்கிறது. கண் பார்வை மங்குவது போன்று இருந்தால்  21 நாட்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வைக்கு பிரச்சனை வராது.

மாதுளம் பழம் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றும். இரவில் நித்திரை வராமல் இருப்பதற்கு தோடம்பழச் சாறில் தேன் கலந்து பருகினால் விரைவில் நித்திரை வரும்.

பாலூட்டும் தாய்மார்கள் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிட வேண்டும். அதேபோல் குழந்தைகளுக்கு கொய்யாப்பழத்தை சாப்பிடக் கொடுத்தால் அவர்களின் எலும்புகள் பலமடையும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பப்பாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் பழங்களை குறைவாக சாப்பிட வேண்டும்.

கருத்து தெரிவிக்க