உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

எதிர்வரும் 11ம் திகதி ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் – கம்மன்பில

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கும் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அதனை அறிவிப்பார் என்று உதய கம்மன்பில ஊடகங்களிடம் கூறினார்.

கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க