உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சீரற்ற காலநிலையினால் மாலைதீவில் தஞ்சம் புகுந்துள்ள இருபது இலங்கையின் நீண்ட நாள் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு வானிலை இயல்பு நிலையை அடையும் வரையில் நாட்டுக்கு திரும்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் மீன்வளத்துறை அமைச்சினால் இன்று (ஜூலை 22) வெளியிடப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை அமைச்சர் திலீப் வேதராச்சி, அவரது அமைச்சு மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 12 மீன்பிடி படகுகள் இன்று காலை நாட்டிற்கு திரும்ப முயற்சித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இதய நோயால் பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவரும் சிகிச்சைக்காக மாலைதீவுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அடுத்த சில நாட்களில் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஒரு அறிவிப்பையும் மீன்வளத்துறை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலில்

*மீன்பிடிக்க வெளியே செல்லும் போது பாதுகாப்பு துணைக்கருவி(கியர்) அணிய வேண்டும்.

*ரேடியோ டிரான்ஸ்மிஷன் சாதனங்களை இயக்க வேண்டும்,
*வேறு எந்த நாட்டின் கடலிலும் நுழைவதைத் தவிர்க்கவும்.
*ஒரு கப்பல் அறியாமல் வெளிநாட்டு கடற்பகுதிக்குள் நுழைந்தால், இந்த விடயத்தை  அருகிலுள்ள தேடல் செயல்பாட்டு மையத்திற்கு தெரிவிக்கவும்.
*அனைத்து நேரங்களிலும் அத்தியாவசிய மருந்துகளை எடுத்துச் செல்லவும்
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கடற்கரையை அடைவது பாதுகாப்பானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க