அமெரிக்காவுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து உரையாட உள்ளார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் விடயம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த இராணுவ நிதியுதவியை ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ள நிலையில், இரு நாட்டுக்கும் இடையிலான உறவினை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்கா வந்துள்ள இம்ரான் கான், அமெரிக்க எம்.பிக்கள் சிலருடனும் உரையாட உள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கல் பாம்பியோவையும், சர்வதேச நிதியத்தின் இடைக்காலத் தலைவர் டேவிட் லிப்டன், உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் ஆகியோரையும் நாளை 23 ஆம் திகதி சந்தித்து நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக உரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கருத்து தெரிவிக்க