சினிமா

சூர்யாவுக்காக மகளின் குரலை அறிமுகம் செய்த ஹரிஸ்!

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான். லைகா நிறுவனம் தயாரிக்கும்   இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திருவான்மியூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அவ்விழாவானது
காப்பான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மெலோடி  பாடலுடன் தொடங்கியது. அப்பாடலை
இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜின் மகள் நிக்கிதா ஹரிஸ் பாடியிருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியுள்ள நிக்கிதாவை  ரசிகர்கள் உற்சாகப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து பேசிய ஹாரிஸ், ஒரு அப்பாவாக பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க