உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘சோஃபா உடன்படிக்கை இராணுவ தளத்தை அமைப்பதற்காக அல்ல ‘

இலங்கையுடன் உரிய முறையில் ஒத்துழைப்பாக செயற்படவே அன்றி இராணுவ தளத்தை அமைக்கும் நோக்கில் சோஃபா ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை என அமெரிக்க தூதுவர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியுள்ளார்.

இலங்கை, அமெரிக்காவுக்கிடையில் சோஃபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் திட்டமிடப்பட்ட நிலையில் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது.

இது இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று இடம்பெற்ற நேர்காணலில் இலங்கைக்கான தூதுவர் அலினா பி. டெப்லிட்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அமெரிக்க படைகளின் வருகை ஒப்பந்தம் ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தத்திற்கான புது வடிவமாகும், மேலும் இது பல சிவப்பு நாடா பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக இலங்கையில் 2017 வெள்ளம் ஏற்பட்ட போது அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியது.  இதன் போது அமெரிக்கா நிவாரண பொருட்களை கொண்டு வந்தது எவ்வாறாயினும் அமெரிக்க விமானங்கள் வருகைக்கு இலங்கையின் அனுமதி தேவைப்பட்டது.

இது போன்ற சந்தர்ப்பத்தில் சிக்கல் இன்றியும் மேலும் ஒத்துழைப்புடனும் இலங்கைக்கு உதவி செய்யவே அமெரிக்க விரும்புகிறது.

இதன் ஒரு கட்டமாகவே படைகள் தொடர்பிலான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க