உள்நாட்டு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

பச்சிலைப்பள்ளி உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற கள் உற்பத்தியை ஊக்கப்படுத்தி சந்தை வாய்ப்பை அதிகமாகப் பெற்றுக் கொள்ள  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .

குறித்த பகுதியில் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற மேலதிக கள்ளை போத்தலில் அடைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியில் 12 மில்லியன் நிதியை மீள்குடியேற்ற அமைச்சு வழங்க முன்வந்துள்ளது .

இதன் தொடர் நடவடிக்கையாக நேற்று முன் தினம் குறித்த அமைச் சின் அதிகாரிகள் பச்சிலைப்பள்ளி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு வருகை தந்து குறித்த போத்தலில் கள் அடைக்கும் நிலையத்தை பார்வையிட்டதுடன் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.

இதன் போது  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் சுரேன், மற்றும் உப தவிசாளர், அமைச்சின் அதிகாரிகள் முகாமையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க