பொன்மொழிகள்

பெருமை, அடக்கம்! ராமகிருஷ்ணர்

  • பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும்; நீ பெருமை அடைய வேண்டுமானால் அடக்கத்தோடும் பணிவோடும் இரு.
  • எல்லாம் மனத்தைப் பொறுத்தது. மனத்தில்தான் பந்தம், மனத்தில்தான் முக்தி. அதனை எந்த நிறத்தில் தோய்க்கிறார்களோ அந்த நிறம் பெறும்.
  • உலக வாழ்க்கைக்குப் பணத்தின் உதவி அவசியந்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைப் பற்றியே வெகுவாகச் சிந்தித்துக் கொண்டிராதே. தானே கிடைக்கக்கூடியதைக் கொண்டு திருப்தியடைவதே மேலான குணம்.

 

கருத்து தெரிவிக்க